முக்கியச் செய்திகள் இந்தியா

வெறுப்பை பரப்பும் பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிராக நடைபயணம்- ராகுல் காந்தி

மக்களிடையே பிரிவினைவாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கவே ஒற்றுமை நடைபயணம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். 3 நாட்கள் கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 11ம் தேதி கேரளாவில் தனது நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 19 நாட்கள் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகாவில் தனது நடைபணத்தை தொடங்கினார்.

31வது நாளான இன்று கர்நாடக மாநிலம் தும்கூர், மாயசந்திரா பகுதியிலிருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணம் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அல்ல. நாட்டில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உருவாக்கிவரும் பிரிவினைவாதத்திற்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கவே என்று கூறினார்.

சுதந்திர போராட்டத்திற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு உதவி செய்ததாகவும், ஆங்கிலேய அரசிடம் சாவர்க்கர் உதவி தொகைப் பெற்றதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாடினார்.

மேலும், மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். அது நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தை முற்றிலும் அழித்துவிடும். பரவலாக்கப்பட்ட கல்வி முறையை தான் நாங்கள் கேட்கிறோம். புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்; அது ஒரு சிலரின் கையில் அதிகாரத்தை குவிக்கிறது. இது பண்பாட்டின் மீதான தாக்குதல். நமது வரலாற்றை சிதைக்கிறது. நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பரவலாக்கப்பட்ட கல்வி முறையையே நாங்கள் விரும்புகிறோம். என்று தெரிவித்தார்.

இந்தியா என்பது பல மாநிலங்கள் ஒன்றிணைந்தது. இந்தி என்பது தேசிய மொழி, ஆனால் எல்லா மாநில மொழிகளும், கலாசாரமும் இங்கு சம முக்கியத்துவம் வாய்ந்தது. அது நான் நமது நாட்டின் தன்மையாகும் என்றார்.

மேலும், வெறுப்பு வன்முறையை பரப்புவது என்பது தேச விரோதச் செயல். அதனை யார் செய்தாலும் அவர்களுக்கு எதிராக போராடுவோம். இந்த ஒற்றுமை நடைபயணத்தில் நான் தனியாக இல்லை. என்னோடு வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த நடைபயணத்தில் இணைந்து உள்ளனர் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேரளா: கூகுள் மேப்பை நம்பி வயலில் இறங்கிய கார்!

Web Editor

நுழைவாயில் கதவை திறக்க தாமதம்; காவலாளியை தாக்கிய பெண் கைது

G SaravanaKumar

தமிழகத்தில் இன்று 6,162 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Jeba Arul Robinson