விருதுநகரில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மராத்தான் போட்டி!

விருதுநகரில் “நலம் விருதுநகர்” என்ற தலைப்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மராத்தான் போட்டியை  மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி வளாகம் முன்பு, உடல் நலம் பேணுவோம் “நலம்…

விருதுநகரில் “நலம் விருதுநகர்” என்ற தலைப்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மராத்தான் போட்டியை  மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி வளாகம் முன்பு, உடல் நலம் பேணுவோம் “நலம் விருதுநகர்” என்ற தலைப்பில், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை, மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தினமும் அதிகாலையில் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்வதால் நமது உடல் புத்துணர்சியோடு இருக்கும் என்பதை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாராத்தான் போட்டியானது 45 வயதுக்கு கீழ் ஒரு பிரிவாகவும், 45 வயதுக்குமேல் உள்ளவர்ளுக்கு ஒரு பிரிவாகவும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

45 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், 45 வயதுக்கு மேல்
உள்ளவர்களுக்கு ஐந்து கிலோமீட்டர் மாரத்தான் போட்டி என இரண்டு பிரிவுகளாக
நடைபெற்றது.

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி வளாகம் முன்பு தொடங்கிய இந்த
மாரத்தான் போட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சூலக்கரை சர்வீஸ் சாலை
வழியாக மீண்டும் சூலக்கரை வரை சென்று, மீண்டும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகம் வழியாக வந்து அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக
ரூ.25,000, 2-வது பரிசாக ரூ.15,000, மூன்றாவது பரிசாக ரூ.10,000 என வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.