புரட்டாசி மாதம் துவங்க உள்ள நிலையில், ஆடுகளை வாங்க இறைச்சி கடைக்காரர்கள் சேலம் மாவட்டம், வீரகனூர் ஆட்டு சந்தையில் குவிந்ததால் விற்பனை களை கட்டியது.
சேலம் மாவட்டம், வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும்
கால்நடை சந்தை, மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாகும். இச்சந்தைக்கு
சேலம் மாவட்டமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும், விவசாயிகள்
விற்பனைக்காக கொண்டு வரப்படும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள்,மேச்சேரி
இன ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள், மாடுகள் விற்பனைக்காக
கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று வீரகனூரில் நடைபெற்ற கால்நடை சந்தையில் ஆடு, மாடுகளை
விற்பனை செய்வதற்காக, ஏராளமான விவசாயிகள் சுமார் இரண்டாயிரத்திற்கும்
மேற்பட்ட ஆடுகளையும், 100க்கும் மேற்பட்ட மாடுகளையும் விற்பனை செய்ய கொண்டு
வந்தார்கள். அதிகாலை முதலே ஆடு, மாடுகளை வாங்குவதற்காக ஆத்தூர், வாழப்பாடி,
தலைவாசல், சேலம், தேனி, துறையூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான
வியாபாரிகள் மற்றும் இறைச்சி கடைக்காரர்கள் சந்தையில் குவிந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், இந்துக்கள் விரதம் இருந்து
சைவ உணவை சாப்பிட்டு அசைவ உணவை தவிர்த்து வருவார்கள். இந்நிலையில்,
நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், மாதத்தின் கடைசி நாள்
என்பதாலும் மீன், கோழி, ஆடுகளின் இறைச்சியை வாங்க கடைகளில் கூட்டம் அலை
மோதும். இதனால், ஆடுகளை வாங்க கறிக்கடைக்காரர்கள் வியாபாரிகள் ஆடுகளை
வாங்க வீரகனூர் ஆட்டு சந்தையில் குவிந்ததால் விற்பனை களைகட்டியது.
மேலும், கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடு ஒன்றுக்கு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விலையேற்றம் அடைந்து, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கு. பாலமுருகன்