தமிழகத்தில் பல முனை போட்டி நிலவுவது அதிமுகவுக்கு சாதகமானது என சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தமிழகத்தில் பல முனை போட்டி நிலவுவது அதிமுகவுக்கு சாதகமானது எனக் கூறினார். மேலும், அதிமுகவிற்கு என தனி வாக்கு வாங்கி உள்ளதால், மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என அவர் தெரிவித்தார்.







