“விடுதலை 2ம் பாகம் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் வெளியாகலாம்” – நடிகர் சூரி பேட்டி!

“விடுதலை 2ம் பாகம் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகலாம்”என நடிகர் சூரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர்…

“விடுதலை 2ம் பாகம் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகலாம்”என நடிகர் சூரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘விடுதலை-1’.  இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  விடுதலை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது.

விடுதலை இரண்டாம் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாக கூறப்படுகிறது.  இந்த திரைப்படத்தின் இந்தாண்டு இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : டி20 உலகக் கோப்பை : ஸ்காட்லாந்து அணியின் ஜெர்சியில் இடம்பெற்ற கர்நாடக அரசின் நந்தினி பால் விளம்பரம்!

இந்நிலையில், “விடுதலை 2ம் பாகம் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகலாம்” என சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த  நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சூரி கூறியதாவது :

“நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்திலிருந்து இளைஞர்கள் வெளியே வர வேண்டும்.போதைப் பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன. கதைக்காக திரைப்படங்களில் போதைப் பொருட்கள் காட்டப்படுகின்றன. சினிமாவில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதை மட்டுமே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்” இவ்வாறு நடிகர் சூரி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.