முக்கியச் செய்திகள் தமிழகம்

மாண்டஸ் புயல் எச்சரிக்கை; 27 விமான சேவை ரத்து

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 27 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன‌. இந்த நிலையில் இன்று பிற்பகல் இருந்து இரவு வரையில் 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விமானங்கள் அனைத்தும் ஏ.டி.ஆர் 72 சீட்டுகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் ஆகும். இந்த சிறிய ரக விமானங்கள் பறக்கும் போது புயல் காற்று அடித்தால் விமானத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும். எனவே ஏ.டி.ஆர். ரக விமானங்களின் சேவைகளை மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் வரையில் நிறுத்தி வைக்கும்படி விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை சென்னை விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தது.இதையடுத்து ஒட்டுமொத்தமாக ஏ.டி.ஆர். ரக விமானங்களை புயல் தாக்கம் ஓயும் வரையில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்கள் தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூர், திருச்சி, மதுரை, ஐதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அனைத்தும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சில விமானங்களும் ரத்து ஆகலாம் என்று கூறப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பயணிகள் வருகை குறைவு: ஜூன் 16 வரை மேலும் சில ரயில்கள் ரத்து!

Halley Karthik

நேர்மையான நல்லாட்சியை வழங்குவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

Halley Karthik

100 கோடி தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் வாழ்த்து

Halley Karthik