என்.எல்.சி. விரிவாக்க பணியை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி!

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு கொடுக்காமல் தடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவஹிருல்லா தெரிவித்தார். கடலூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில்…

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு கொடுக்காமல் தடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவஹிருல்லா தெரிவித்தார்.

கடலூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கும்
மாநிலம் முழுவதும் இருக்கக் கூடிய மாவட்ட நிர்வாகிகளுக்கும் மக்கள் நலப்பணிக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற
உறுப்பினரும், அக்கட்சியின் மாநில தலைவருமான ஜவஹிருல்லா
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சி பொற்காலமாக உள்ளது. உள்ளாட்சிகளுக்கான அதிகாரம், ,நிதி நிலைமை கூடுதலாக தமிழ்நாடு அரசு இத்தருணத்தில் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

என்.எல். சி விவகாரத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் முற்றுகை போராட்டம் அறிவித்து கலவரமாக முடிந்துள்ளது. தமிழக அரசு,  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ள நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டும். என்.எல்.சி தொடர்பான பணிக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுப்பதை விட தடுக்க வேண்டும். என்.எல்.சிக்கு பாதுகாப்பு கொடுக்கக் கூடாது. கால்வாய்கான திட்டத்தை கைவிட்டு மீண்டும் விவசாய பூமி ஆக அப்பகுதியை மாற்ற வேண்டும் என்றார்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.