மணிப்பூர் மாநிலம் சாந்தனூர் மாவட்டம் சாக்பிகா ரோங் பகுதியை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்தனர். இதில் முதலில் 8 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மணிப்பூரில் கள்ளச்சாரயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 370-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மணிப்பூர் முதல்வர் யும்நாம் கெம்சந்த் சிங் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். சிஜா மருத்துவமனையில் 140-க்கும் மேற்பட்ட நோயாளிகளும், பாம்பினா மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்டவர்களும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.




