7ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கீழ நாஞ்சில் நாட்டில் வசித்து வரும் குருமூர்த்தி என்பவரின் மகள் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாலை நேர டியூசனுக்கு மாணவி சென்றபோது, அதே தெருவில் வசிக்கும் 55 வயதுடைய மூர்த்தி என்பவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரும் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.







