பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!

தாம்பரம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரத்தில் வசித்த வருபவர் 23 வயதான கருணாகரன். இவர் குளிர்சாதன பெட்டி…

தாம்பரம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரத்தில் வசித்த வருபவர் 23 வயதான கருணாகரன். இவர் குளிர்சாதன பெட்டி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். பின்னர் ப்ரோபசர் காலனியை சேர்ந்தவர் செல்வம் என்பவருக்கு 16 வயதில் யாஷிகா என்ற மகள் இருக்கிறார். ஒரு நாள் செல்வம் வீட்டுக்கு குளிர்சாதன பெட்டி பழுது பார்க்க கருணாகரன் சென்றுள்ளார். அப்போதுதான் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் நட்பு காதலாக மாறியது. இவர்களுடைய காதலுக்கு யாஷிகாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் யாஷிகாவின் இல்லத்திலேயே திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் இதுகுறித்து யாஷிகாவின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் திருப்பதியில் இருக்கும் தகவல் அறிந்த போலீசார் அவர்களை அழைத்து வந்து விசாரித்து, கருணாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply