பண்ருட்டியில் திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான இளம்பெண். இவரும் ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இளம்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தைக் காட்டிய சத்தியமூர்த்தி அந்த பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார்.
தான் கர்ப்பமடைந்ததை சத்தியமூர்த்தியிடம் கூறி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டிருக்கிறார் அந்த பெண். ஆனால் சத்தியமூர்த்தி திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவிக்கவே என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த அந்த பெண் நடந்ததை அவரது தாயாரிடம் கூறி அழுதுள்ளார்.
பின்னர் இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சத்தியமூர்த்தியை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை செய்தனர். தொடர்ந்து அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.







