முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா நிதிக்கு ரூ.2 லட்சம் வழங்கிய மாற்றுத்திறனாளி: கேரள முதல்வர் பாராட்டு

கேரளாவில் உள்ள பீடித்தொழிலாளியான மாற்றுத்திறனாளி, தனது வங்கிக் கணக்கில் உள்ள ரூ 2 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இவரின் செயலுக்குக் கேரள முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் வசிக்கும், மாற்றுத்திறனாளி ஜனார்த்தனன். இவர் ஒரு பீடி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கேரளா அரசுக்கு கொரோனா தடுப்பூசியின் ஒரு டேஸ் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்ற செய்தியைத் தெரிந்தால், தனது வங்கிக்கணக்கிலிருந்து ரூ. 2 லட்சத்தை அவர் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.

இவரது வங்கு கணக்கில் தற்போது ரூ. 850 தான் இருக்கிறது. ஆனால் இதுகுறித்து இவர் எந்த கவலையும் அடையவில்லை. இந்த நெருக்கடிக் காலத்தில் கேரள அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இதைச் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இவரின் செயலுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

விஜய் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

Karthick

மெகபூப முப்தி பாஸ்போர்ட் நிராகரிப்பு!

L.Renuga Devi

உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின் நிலையம் அமையும் மாநிலம் இதுதான்!

Karthick