முக்கியச் செய்திகள் தமிழகம்

விவேக் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்த மு.க. ஸ்டாலின்

மாரடைப்பால் மறைந்த நடிகர் விவேக்கின் வீட்டுக்குச் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாராட்டைப்பால் மரணமடைந்தார். நடிகர் விவேக் ஏப்ரல் 16 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மயக்க நிலையில் வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முந்தைய தினத்தில்தான் அவர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையைச் செலுத்திக்கொண்டார். இதனால் அவரது திடீர் மாரடைப்புக்குக் காரணம் கொரோனா தடுப்பூசி என்ற சந்தேகங்கள் எழுந்தது.

ஆனால் அவரது மரணத்திற்குத் தடுப்பூசி காரணம் இல்லை என்று அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் கூறினார். மேலும் இந்த தகவலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தினார். மேலும் அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். அவரது திடீர் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாகப் பகிர்ந்துகொண்டார். இதைத்தொடர்ந்து காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விவேக்கைப் பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க திமுக தலைவர் ஸ்டாலின் விருகம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

Advertisement:

Related posts

இந்தியாவுக்குள் நுழைந்தது புதிய வகை கொரோனா வைரஸ்!

Jayapriya

விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை தொடக்கம்!

Gayathri Venkatesan

தேர்தல் வந்தால் மட்டுமே திமுகவினர் மக்களிடம் வருகின்றனர்: முதல்வர்!

Ezhilarasan