மாமன்னன் படத்தின் “A.R.Rahman’s Reggae” (ஏ.ஆர்.ரஹ்மான்ஸ் ரெக்கே) என்ற பாடல் மே 27 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ், அனைத்தையும் சாத்தியப்படுத்திய உதயநிதி ஸ்டாலினுக்கும், ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கும் நன்றி எனவும், பெரும் உழைப்பை கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும் பிரியமும்” என்று கூறியிருந்தார்.
It’s time for the next ride! Get ready for the journey ahead! The Dream Hero is here!! An @arrahman Reggae! 🎤🎶🦋 #Maamannan 🤴@Udhaystalin @KeerthyOfficial @RedGiantMovies_ @SonyMusicSouth #FahadhFaasil #Vadivel pic.twitter.com/QxXRt2yDez
— Mari Selvaraj (@mari_selvaraj) May 25, 2023
இப்படத்தின் முதல் பாடலான ’ராசா கண்ணு’ கடந்த 19 ஆம் தேதி வெளியானது. வைகை புயல் வடிவேலுவின் குரலில் வெளியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான “A.R.Rahman’s Reggae” (ஏ.ஆர்.ரஹ்மான்ஸ் ரெக்கே) நாளை மறுநாள் (மே 27) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.