ஜூன் 1 ஆம் தேதி ’மாமன்னன்’ இசை வெளியீட்டு விழா – சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு!!

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற…

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கர்ஜித்த சிஎஸ்கே…!!

இப்படத்தின் முதல் பாடலான ’ராசா கண்ணு’ கடந்த மே 19 ஆம் தேதி வெளியானது. வைகை புயல் வடிவேலுவின் குரலில் வெளியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து மே 27 ஆம் தேதி வெளியாம இப்படத்தின் ’ஜிகு ஜிகு ரயில்’ என்ற பாடலையும் ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது ஜூன் 1 ஆம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என்றும், மிகவும் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.