நானும் யுவனும் மழைத்தூறல் நடுவே அன்பு மழை பொழிந்த மக்கள் முன் நன்றியோடு நின்றோம்.
கடந்த ஜூன் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ”மாமனிதன்” இத்திரைப்படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருந்தனர். “யுவன்ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா ” இருவரும் இணைந்து இப்படத்திற்கும் இசையமைத்திருந்தனர். மேலும் இப்படம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த படம் வெளியான பொது பெரிதாகப் பேசப்படாத நிலையில், தற்போது பலரால் பார்க்கப்பட்டு படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் படத்தைப் பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் நேர்மறையான கருத்துகளைப் பதிவிட்டு வருவதால் இப்படத்தின் மீதான ஆவல் திரை ரசிகர்களிடம் அதிகம் பரவி வருகிறது. இதன் விளைவாக வெறும் 40% பார்வையாளர்களால் மட்டுமே திரையரங்கில் பார்க்கப்பட்ட இப்படம், தற்போது “ஆஹா” ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியைப் படக்குழு இன்று சென்னை பெசன்ட் நகரில் கேக் வெட்டி கொண்டாடியது. பின் இதற்கான புகைப்படங்களைத் தனது ட்விட்டரில் பதிவிட்ட சீனுராமசாமி “நானும் யுவனும் மழைத்தூறல் நடுவே அன்பு மழை பொழிந்த மக்கள் முன் நன்றியோடு நின்றோம். ஆகாவின் வணிக தலைவர் சிதம்பரம்நடராசஜன் மாமனிதன் வெற்றியை அறிவித்தார். இந்த வெற்றியை இளையராஜா அவர்களுக்கு சமர்ப்பிக்க நான் முன்மொழிந்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்