முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

’மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்’ – எல்.முருகன் ட்வீட்

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாராட்டியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாமனிதன்”. இத்திரைப்படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். இப்படம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாமனிதன் திரைப்படம் வெளியான பொது பெரிதாகப் பேசப்படவில்லை. 40% பார்வையாளர்களால் மட்டுமே திரையரங்கில் பார்க்கப்பட்டது. ஆனால் ’ஆஹா’ ஓடிடி தளத்தில் வெளியான பின்னர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பலரும் படத்தைப் பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் நேர்மறையான கருத்துகளைப் பதிவிட்டு வருவதால் இப்படத்தின் மீதான ஆவல் திரைரசிகர்களிடம் அதிகம் பரவி வருகிறது.

பல சினிமா பிரபலங்களும், அரசியர் தலைவர்களும் மாமனிதன் திரைப்படத்தை பாராட்டி வரும் நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் மாமனிதன் படத்தை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்..!  இப்படத்துக்கு சர்வதேச விருதுகள் மற்றும் மக்கள் அளித்த வெற்றி என உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் இது போன்ற படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் – நடிகர் பார்த்திபன் ட்வீட்

Gayathri Venkatesan

மின்சார கட்டண உயர்வு கருத்து கேட்பு கூட்டம் நிறைவு

G SaravanaKumar

ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை: தமிழிசை

EZHILARASAN D