ஜி20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3 நாள் பயணமாக ஐரோப்பா நாடுகளுக்கு சென்றுள்ளார். பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரின் முன்னேற்றம், அமைதி மீது நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம். நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்று வருகிறது.
ஜி 20 மாநாட்டிற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாதது குறித்து அவர் கூறியதாவது: . எதிர்கட்சி தலைவரை அழைக்க வேண்டாம் என ஏற்கனவே முடிவு செய்து விட்டனர். இந்த செயல் இந்திய மக்கள்தொகையில் 60% பேரின் தலைவரை அவர்கள் மதிப்பதில்லை என்பதை பிரதிபலிக்கிறது என ராகுல் காந்தி கூறினார்.