INDIA என்ற பெயர் நன்றாக வேலை செய்வதாகவும், நாட்டின் பெயரை மாற்ற விரும்புவது அபத்தமானது என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3 நாள் பயணமாக ஐரோப்பா நாடுகளுக்கு சென்றுள்ளார். பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“நாங்கள் எங்கள் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரைக் கொண்டு வந்தோம், இது ஒரு அருமையான யோசனை. இது நாம் யார் என்பதை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் குரலாக நாங்கள் கருதுகிறோம். எனவே பெயர் நன்றாக வேலை செய்கிறது. இந்த பெயரை கண்டு பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே பாரத் என்ற பெயரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
ஆனால் நாட்டின் பெயரை மாற்ற விரும்புவது அபத்தமானது. அதானி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னை கிளம்பும் நேரத்தில் பிரதமர் திசை திருப்பும் யுக்தியை கையாண்டு வருகிறார். தற்போது பெயர் மாற்ற விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்” என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.