நடிகர் விஷாலுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் நடிக்க இருக்கிறார்.
நடிகர் விஷால், சக்ரா படத்தை அடுத்து ’எனிமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ஆனந்த் ஷங்கர் இயக்கு கிறார். ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தை அடுத்து அவர் நடிக்கும் படத்தை து.ப.சரவணன் இயக்குகிறார். விஷாலின் 31-வது படமான இதில் டிம்பிள் ஹயாதி ஹீரோயினாக நடிக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் இந்த படத்தில் ரமணா, நந்தா, யோகிபாபு முக்கிய கேரக்டர்களில் நடிக்க இருக்கின்றனர். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாபுராஜ், தமிழில் ஜனா, ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து மலையாளத்தில் வெளியான ஜோஜி படத்தில் இவர் நடிப்பை பார்த்து, அவரை விஷால் வில்லனாக இதில் நடிக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.