தோசை சுட்டுக்கொடுத்து வாக்குசேகரித்த மநீம வேட்பாளர்!

மயிலாடுதுறை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குடிசை வீட்டில் தோசை சுட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவடையவுள்ள சூழலில், பரப்புரை அனல்…

மயிலாடுதுறை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குடிசை வீட்டில் தோசை சுட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவடையவுள்ள சூழலில், பரப்புரை அனல் பறந்து வருகிறது. மக்களுடன் மக்களாக கலந்து வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். டீக்கடையில் டீ போட்டு கொடுப்பது, பரோட்டா தயாரிப்பது, தோசை சுடுவது, துணி துவைப்பது, தண்ணீர் அடித்துக் கொடுப்பது என வாக்கு சேகரிக்கும்போது வேட்பாளர்கள் செய்யும் செயல்களும் கவனம் பெறுகிறது.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் மணல்மேடு அருகே உள்ள கடலங்குடியில் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக கடலங்குடியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து வரதம்பட்டு, தாழஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது குடிசை வீடுக்குள் சென்ற மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரவிச்சந்திரன், தோசை ஊற்றி கொடுத்து வாக்கு சேகரித்தார். இது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.