சற்று நேரத்தில் வெளியாகும் ‘மகாராஜா’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!

விஜய் சேதுபதி நடிப்பில், தயாராகி வரும் ‘மகாராஜா’ திரைப்படம் குறித்து பெரிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில்…

விஜய் சேதுபதி நடிப்பில், தயாராகி வரும் ‘மகாராஜா’ திரைப்படம் குறித்து பெரிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக ‘மகாராஜா’ திரைப்டம் உருவாகி வருகிறது. குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்’ போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் அமைந்திருந்தது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

இதையும் படியுங்கள் : “நான் நலமுடன் இருக்கிறேன், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” – வைகோ பதிவு!

தற்போது இந்த படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் BIG ANNOUNCEMENT இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இது திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை பற்றி இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.