முக்கிய விளையாட்டு செய்திகள்

சிங்கப்பூர் ஓபன் பேட்மண்டன் தொடர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், சீன வீராங்கனை ஹிபிங்ஜியா உடன் மோதி 21-19, 11-21, 21-17 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். சிங்கப்பூர்…

சிங்கப்பூர் ஓபன் பேட்மண்டன் தொடர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், சீன வீராங்கனை ஹிபிங்ஜியா உடன் மோதி 21-19, 11-21, 21-17 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் – காலிறுதியில் பிவி சிந்து:

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, வியட்நாம் வீராங்கனை துய் லின் குயேன் உடன் மோதிய சிந்து 2-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் – காலிறுதியில் HS பிரணாய்:

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின், இரண்டாம் சுற்று ஆட்டத்தில் தைவான் வீரர் டைன் சென் சோ – வை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி HS பிரணாய் காலிறுதிக்கு முன்னேறினார்.

துப்பாக்கி சுடுதல்; இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்:

சர்வதேசத் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் 2022 போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த பார்த்மகிஜா, அர்ஜுன் பபுடா, டுஷர்மேன் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்த ஆடவர் குழு 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர். அதேபோல, இந்தியாவின் இளவேனில் வளரிவன், மேகுளி கோஷ், ரமிதா, உள்ளிட்டோர் ஒருங்கிணைந்த மகளிர் குழு 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்:

சர்வதேசத் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கழகத்தின் ISSF உலகக் கோப்பை 2022 போட்டியில், இந்திய வீரர்கள் பிரித்விராஜ் தொண்டைமான், பௌனீஸ் மெண்டிரட்டா, விவான் கபூர் உள்ளிட்டோர் குழு வெள்ளி வென்று அசத்தியுள்ளனர். இதில் பிரித்விராஜ் தொண்டைமான் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் ஓபன் பேட்மண்டன் தொடர்; காலிறுதி சுற்றில் சாய்னா:

சிங்கப்பூர் ஓபன் பேட்மண்டன் தொடர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், சீன வீராங்கனை ஹிபிங்ஜியா உடன் மோதி 21-19, 11-21, 21-17 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா நேவால்.

அருணாச்சல பிரதேசம் சென்றடைந்த ஒலிம்பியாட் ஜோதி:

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி அருணாச்சல பிரதேசம் மாநிலத்தைச் சென்றடைந்துள்ளது. முக்கிய நகரமான அம்சாய் நகரை சென்றடைந்த ஒலிம்பியாட் ஜோதியை கிராண்ட் மாஸ்டர் மித்ரபா குஹாவிடம் இருந்து அம்மாநில முதல்வர் சவுனா மெயின் பெற்றுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.