திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் உட்பட 10 முக்கியமான பிரச்சனைகளை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர் .
- பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துரை சந்திரசேகர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இத்தொகுதியில் கிராமப்புற பெண்கள் உயர்கல்வி பெரும் வகையில் அரசு மகளிர் கல்லூரியை அமைக்க வேண்டும்.
- வேலைவாய்ப்பை உருவாக்கிட தொழில்நுட்பக் கல்லூரியை அமைத்திட வேண்டும்.
- அரசு பொது மருத்துவமனையை நவீனப்படுத்த வேண்டும்.
- ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடத்தை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
- விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவர் சந்தை அமைத்திட வேண்டும்.
- சமத்துவபுரம் தமிழ்நாடு வீட்டு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மீஞ்சூர் பகுதியில் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும்.
- மீஞ்சூர் பொன்னேரி பகுதி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
- குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்த வேண்டும்.
- பழவேற்காட்டில் முகத்துவாரத்தினை நிரந்தரமாக தூர்வாரி சிறு மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்.
- ஆரணி கொசஸ்தலை ஆறுகளில் கூடுதலாக தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆரணியில் நவீன பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ம.பவித்ரா








