சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் சிறப்பு அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ளது.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தது. கடந்த ஜீலை 2-ம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின், மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி ஒரு வாய்ஸ் கொடுத்திருக்கிறார் என கூறப்படுகிறது.
Are you guys ready for the big reveal?!#Maaveeran at 6PM 🕕
Stay tuned 🥳@Siva_Kartikeyan @madonneashwin @AditiShankarofl @iamarunviswa @ShanthiTalkies @DirectorMysskin #Saritha @iYogiBabu @vidhu_ayyanna @philoedit @dineshmoffl @DoneChannel1 pic.twitter.com/aizMYnZsVq
— Red Giant Movies (@RedGiantMovies_) July 11, 2023
இந்த நிலையில், மாவீரன் திரைப்படத்தின் சிறப்பு அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







