பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் தீவிரம்

பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் தீவிரம் . தென்காசி மாவட்டம், தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு,…

பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,
சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் தீவிரம் .

தென்காசி மாவட்டம், தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு, கேரளா மாநிலம் ஆரியங்காவு பகுதியில் உள்ள பாலருவியில் ஆண்டுதோறும், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இயற்கையின் அழகை கண்டு களித்தும், அருவியில் குளிப்பதும் உண்டு. எனவே இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வருகை தருவர். இங்கு கேரள மாநிலத்தவர்களை விட தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் அளவுக்கு அதிகமாக செல்வது வழக்கம்.

தற்போது, சீசன் முடிந்து கோடைக்காலம் தொடங்கவுள்ளது. இந்த வருடம் பருவமழை பொய்த்து போனதன் காரணமாக, கோடை காலத்திற்கு முன்பு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக, கேரள வனத்துறையினர் சுமார் ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதன் மூலம், அருவி விழும் தடாகத்தில் சுற்றுலா பணிகள் நின்று குளிக்கும் வகையிலும், அவர்கள் பாதுகாப்பாக அருவி பகுதிக்கு செல்லும் வகையிலும், படிக்கட்டுகள், கைப்பிடிகள் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக, பாலருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி
வழங்கப்படவில்லை. மேலும், பாலருவியில் குறைந்த அளவை தண்ணீர் கொட்டி வருவதால் எப்பொழுதும் தண்ணீர் ஓடும் கழுதருட்டி ஆறு, தற்போது வறண்டு காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.