மகாராஷ்டிரா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் பசவராஜ் பாட்டீல், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியலில் பல திருப்பங்கள் நடைபெறுகின்றன. மேலும் அரசியல் கட்சியினர் பலர் கட்சித்தாவலில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது. காங்கிஸிலிருந்து விலகி பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்தார். மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பசவராஜ் பாட்டீல் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். மேலும் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







