எடப்பாடியில் விமரிசையாக நடந்த ஸ்ரீஏழுபதி ஐயனாரப்பன், கோயில் மகா குடமுழுக்கு விழா!

செட்டிமாக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீஏழுபதி ஐயனாரப்பன், கோயின் மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.  பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள செட்டிமாங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஏழுபதி ஐயனாரப்பன்,…

செட்டிமாக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீஏழுபதி ஐயனாரப்பன், கோயின் மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.  பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள செட்டிமாங்குறிச்சி கிராமத்தில்
அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஏழுபதி ஐயனாரப்பன், ஸ்ரீ பொன்னியம்மாள், ஆகிய
சுவாமிகளுக்கு  மகா குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக யாகசாலையில் கணபதி ஹோமம் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு ஹோமம்,  மற்றும் பல்வேறு வேத மந்திரங்கள் முழங்க ஏக சாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்த தீர்த்தத்தை கொண்டு கோபுர கலசத்தின் மீது தெளித்து மகா குடமுழுக்கு செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

அப்போது பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு சுவாமிகளுக்கு
தீபாரதனை காட்டப்பட்டது.  பின்னர் கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராம
மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.