ஆனந்த் மஹிந்திராவின் பதிலைக் கேட்டு அமெரிக்காவின் செல்போன் கடை விற்பனையாளர் புருவம் உயர்த்தியதாக ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடிய நபர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 10.4 மில்லியன் Followers-களை வைத்துள்ளதோடு, அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் புதிரான விஷயங்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாகவும் வைத்திருப்பவர்.
இது தவிர, அவர் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களையும், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளுக்காக மக்களை பாராட்டுவதையும் அவரது பல ட்விட்களில் நம்மால் காண முடியும். அத்துடன் எளிய மனிதர்களின் திறமைகளை, கண்டுபிடிப்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டுகளை தெரிவிப்பார். மேலும், அவர்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார்.
https://twitter.com/anandmahindra/status/1715187456977351165
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தங்களது ஸ்மார்ட் போன் நிறுவனமான கூகுள் பிக்ஸல் போனின் தயாரிப்பை இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் செய்தியை பகிர்ந்து ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளதாவது..
” நான் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள வெரிசோன் நகருக்கு எனது சிம் கார்டை பெறுவதற்காக சென்றிருந்தேன். அந்த கடையில் உள்ள விற்பனையாளர் எனது ஆப்பிள் போனை பார்த்தார். நான் இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது எனக் கூறியவுடன் புருவம் உயர்த்தி அதனை பார்த்தார்.
என்னிடம் கூகுள் பிக்ஸல் போனும் உள்ளது. அதனை இந்தியாவில் தயாரிக்கும் போது அதனையும் நான் மாற்றிக் கொள்வேன் என அந்த விற்பனையாளரிடம் பெருமையுடன் கூறி வந்தேன்” என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.







