சோழவரம் அருகே விளையாட சென்று மாயமான 8 வயது சிறுவன், மழை நீர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவராஜ் என்பவரின் 8 வயது மகன் கவியரசு, அப்பகுதியிலுள்ள அரசுப்பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பெற்றோர் நேற்று வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்ற நிலையில், சிறுவன் கவியரசு நண்பர்களுடன் விளையாடியுள்ளார்.
அண்மைச் செய்தி: “இ-மார்க்கெட் வர்த்தகம் புதிய இந்தியாவின் உணர்வை காட்டுகிறது – பிரதமர் மோடி”
மாலையில் பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய போது, சிறுவன் கவியரசு வீட்டில் இல்லாததால் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். எங்கும் தங்களது மகன் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், அலமாதியில் உள்ள மழை நீர்கால்வாயில் சிறுவனின் சடலம் இருப்பதை அறிந்த போலீசார், உடனடியாக மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாட சென்ற தங்களது சிறுவன் மழைநீர் கால்வாயில் உயிரிழந்து கிடந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








