முக்கியச் செய்திகள் இந்தியா

‘இ-மார்க்கெட் வர்த்தகம் புதிய இந்தியாவின் உணர்வை காட்டுகிறது’ – பிரதமர் மோடி

மத்திய அரசின் இ-மார்க்கெட் வர்த்தகம் புதிய இந்தியாவின் உணர்வை காட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, சமீபத்தில் பத்ம விருது பெற்ற 126 வயதான பாபா சிவானந்தாவின் உடல்தகுதி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், பாபா சிவானந்தாவின் உடல்தகுதி நாட்டின் விவாத பொருளானது என்றும், அவர் யோகாவில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும், 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியுள்ளது என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இது இந்தியாவின் திறன் மற்றும் ஆற்றலையும் குறிக்கிறது என கூறினார்.

அண்மைச் செய்தி: “உபரி பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகாலம் பணி நீட்டிப்பு” – உயர்கல்வித்துறை

மேலும், உலகில் இந்தியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது என்பதையும் ஏற்றுமதி இலக்கு உணர்த்துகிறது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், முன்னதாக, பெரிய நபர்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு பொருட்களை விற்க முடியும் என்ற சூழல் இருந்து வந்ததாகவும், தற்போது இ-மார்க்கெட் வர்த்தகம் இதனை மாற்றி புதிய இந்தியாவின் உணர்வை காட்டுகிறது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தின் உள் பகுதிகளில் அனல்காற்று வீசும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்!

Halley Karthik

செல்போனை சர்வீஸ் செய்ய மறுத்த நிறுவனம்; அதிரடி தீர்ப்பு வழங்கிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்

Arivazhagan Chinnasamy

காதலியை கத்தியால் குத்திய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

Saravana