தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் அந்த இரண்டு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. மதுராந்தகத்தில் 285 வாக்குச்சாவடிகளிலும், தாராபுரத்தில் 302 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவும் நிலையில் இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் திமுக, தவெக, அதிமுக, இடதுசாரி, நாம் தமிழர் வேட்பாளர்கள் தங்களது வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.
இந்த நிலையில் காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 15.99% சதவிதமும், தாராபுரம் தொகுதியில் 17.55% சதவிதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. அதேபோல் புதுச்சேரி மாநில தட்டாஞ்சாவடியில் 19.20% வாக்குகள் பதிவாகி இருந்தன.
காலை 11 மணி நிலவரப்படிமதுராந்தகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 35.55% சதவிதமும், தாராபுரம் தொகுதியில் 37.28% சதவிதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. அதேபோல் புதுச்சேரி மாநில தட்டாஞ்சாவடியில் 39.29% வாக்குகள் பதிவாகி இருந்தன.
மதியம் 1 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 55.19% சதவிதமும், தாராபுரத்தில் 56.09% சதவித வாக்குகளும் பதிவாகியிள்ளது. அதேபோல புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியில் 57.27% சதவித வாக்குகளும் பதிவாகியுள்ளது.
மதியம் 3 மணி வரை பதிவான வாக்குகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி மதியம் 3 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 70.31% சதவிதமும், தாராபுரத்தில் 68.08% சதவித வாக்குகளும் பதிவாகியிள்ளது. அதேபோல புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியில் 68.91% சதவித வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் மாலை 5 மணி வரை பதிவான வாக்குகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி மாலை 5 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 83.86% சதவிதமும், தாராபுரத்தில் 78.53 % சதவித வாக்குகளும் பதிவாகியிள்ளது. அதேபோல புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியில் 78.83% சதவித வாக்குகளும் பதிவாகியுள்ளது. இடைத்தேர்தலுக்கான பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




