மதுரை ஊராட்சி செயலாளர் கொலை வழக்கு: உறவினர்கள் உட்பட 3 பேர் கைது

மதுரையில் ஊராட்சி மன்றச் செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக உறவினர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் லஷ்மணன். இடையபட்டி ஊராட்சியின் செயலாளராகப் பணிபுரிந்து…

மதுரையில் ஊராட்சி மன்றச் செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக உறவினர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் லஷ்மணன். இடையபட்டி ஊராட்சியின் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார். மேலும், தங்களது குல வழக்கப்படி வரிச்சியூர் அருகேயுள்ள கருப்புகால் காளியம்மன் கோயிலில் பூசாரியாகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை லஷ்மணன் தனது இருசக்கர வாகனத்தில் கோயில் பூஜைக்காக தச்சனேந்தல் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவரை வழிமறித்த சில மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் லஷ்மணனை கடுமையாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்த லஷ்மணனை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து, கருப்பாயூரணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக லஷ்மணனின் உறவினர்களான சரத்குமார், சிங்கராஜ் அவருடைய நண்பர் மணிகண்டன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரம்பரை கோயிலில் முதல் மரியாதை வழங்குவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.