மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 10 பேருக்கு விளக்கம் கேட்டு கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பணியாற்றிவரும் காமாட்சி என்பவர் போலியான கல்விச் சான்றிதழை வழங்கி பணியாற்றி வருவதாக புகார் எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோயில் நிர்வாகம் நடத்திய விசாரணையில் காமாட்சி உட்பட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து விசாரணை குழு அமைக்கப்பட்டு கோயிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் கல்விச் சான்றிதழ்களை பெற்று, அவர்கள் படித்த பள்ளிக்கு அவைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், பள்ளியிலிருந்து வந்த அறிக்கையைப் பொறுத்து கல்வி சான்று குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் பத்து பேருடைய கல்வி சான்றிதழ்களில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களிடம் விளக்கம் கேட்டு கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.