வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு 2020-2021 கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு செயல்முறை தேர்வு, 11 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மதிப்பெண் கணக்கிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். மேலும் இந்த மதிப்பெண்ணில் மாணவர்களுக்கு திருப்தி இல்லை எனக் கருதும் மாணவர்களுக்கு தனியாக பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

இந்நிலையில் வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in இணையதளங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதைப்போல மாணவர்கள் பள்ளியில் சமர்பித்த அலைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22.07.2021 அன்று காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில், மாணவர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.







