மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும், என அறிவித்தது. மேலும் திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு சில கட்டுபாடுகளை தமிழ அரசு அறிவித்திருந்தது.
மேலும், கொரோனா பரவல் காரணமாக சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் அனைத்தும், கோயில் வளாகத்திலேயே நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சித்திரை திருவிழாவின் நிகழ்வுகளில் ஒன்றான, முகூர்த்த கால ஊன்றும் விழா, மதுரை அழகர்கோயிலில் நடைபெற்றது. இதற்காக, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். கோயிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்த பின்னர், திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனையடுத்து முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் பக்தர்களின்றி நடைபெற்றது. ஏப். 15-ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா ஏப்.26-ல் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







