மக்களின் வாழ்வாதாரத்தைவிட, வாழ்வே முக்கியம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய, துணை நிலை ஆளுநர தமிழிசை சௌந்தரராஜன், ஊரடங்கின் போது மிகவும் அவசியம் என்றால் மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார். அடைப்பு என்பதை விட அரசு மக்களை அடை காக்கிறது என இந்த ஊரடங்கை புரிந்துகொள்ள வேண்டும் என தமிழிசை கூறினார். மக்களின் வாழ்வாதாரத்தைவிட, அவர்களின் வாழ்வு முக்கியன் என்பாதால் தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.







