கானா நாட்டின் வர்த்தக ஆணையராக மேலூரை சேர்ந்த தொழிலதிபர் அருண்ராஜா பெரியசாமி பொறுப்பேற்றுள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சூரக்குண்டுவைச் சேர்ந்த தொழிலதிபர் பெரியசாமி. இவரது மகன் தொழிலதிபர் அருண்ராஜா. இவர் இந்திய -ஆப்பிரிக்க வர்த்தக கவுன்சிலில் கானா நாட்டின் வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரைவுப்படுத்தி, மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஐஇடிஒ, என்ஆர்ஐ கவுன்சில் அவார்ட்ஸ், ஜிஐஒ மாநாட்டில். இந்தியா- கானா வர்த்தக ஆணையராக அருண்ராஜா பெரியசாமிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
அண்மைச் செய்தி: அதிமுகவை எதிர்க்க திமுகவிடம் சக்தி கிடையாது – எடப்பாடி பழனிசாமி
இதுகுறித்து வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அருண்ராஜா பெரியசாமி தெரிவிக்கையில், மதுரையில் இந்திய- கானா அலுவலக திறப்பு விழா மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இருநாட்டு கமிஷனர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த அலுவலகம் இரு நாட்டுக்கும் வர்த்தக பாலமாக இயங்கும். இதன் மூலம் தொழில் வளத்தை உயர்த்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.







