மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த அரசு பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த 41 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்களுது க்குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகவும்” தெரிவவிக்கப்பட்டுள்ளது.




