மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு இழப்பீடாக 9 லட்ச ரூபாயை 6% வட்டியுடன், 12 வாரங்களுக்குள் வழங்க தமிழ்நாடு மின்வாரியத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சியை சேர்ந்த லட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், “மின் கம்பத்துடன் சட்டவிரோதமாக கேபிள் டிவி வயர் இணைக்கப்பட்டு இருந்ததை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இத்தகைய விபத்து நிகழ்ந்திருக்காது.
அந்நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே, மனுதாரரின் கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். எனவே மனுதாரருக்கு 9, லட்சத்து 7 ஆயிரத்து 104 ரூபாயை, 12.6.2006 முதல் தற்பொழுது வரை ஆண்டுக்கு 6% வட்டியுடன் இணைத்து 12 வாரத்திற்குள் வழங்க தமிழ்நாடு மின்வாரிய தலைவருக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.








