முக்கியச் செய்திகள் தமிழகம்

திருப்பூரில் நாளை சிபிஐ 25-வது மாநில மாநாடு-முதலமைச்சர் பங்கேற்பு

திருப்பூரில் நாளை சிபிஐ 25-வது மாநில மாநாடு தொடங்குகிறது. 4 நாட்கள் வரை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு நாளைய தினம் திருப்பூரில் துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக ஒன்றிய அரசு பின்பற்றக்கூடிய மக்கள் விரோத போக்கு மற்றும் மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

மக்கள் விரோத பாசிச மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்து மாநாட்டின் ஒரு பகுதியாக செந்தொண்டர் படை அணிவகுப்பு நடைபெற உள்ளது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவிற்கு எதிராக மத சார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியுள்ளது.

இந்தியாவில் 20 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமலும் , லட்சக்கணக்கான மக்கள் சாலையோரங்களில் வசித்து வரக்கூடிய நிலையில் பிரதமர் மோடி எவ்வாறு நாடு வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கிறார் என தெரியவில்லை.

அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை. பாஜகவால் ஏற்படுத்தப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின் சுயமாக முடிவெடுக்கும் திறனை அதிமுக இழந்துவிட்டது என்று முத்தரசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கை மக்கள் புரட்சியில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்?

G SaravanaKumar

ஹீரோக்கள் ரூ.100 கோடி சம்பளம் வாங்குவது சரியா? வேலு பிரபாகரன் கேள்வி

EZHILARASAN D

நுபுர் ஷர்மாவை கைது செய்ய வேண்டும்: மம்தா பானர்ஜி

Mohan Dass