மதுரையில் தலை துண்டான விவகாரம்-ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது

மதுரை புது விளாங்குடி பகுதியில் பாதாள சாக்கடை பணியின்போது வீரணன் என்ற தொழிலாளியின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பொறியாளர் சிக்கந்தர், ஓட்டுநர் சுரேஷ், கண்காணிப்பாளர் பாலு ஆகிய 3…

மதுரை புது விளாங்குடி பகுதியில் பாதாள சாக்கடை பணியின்போது வீரணன் என்ற தொழிலாளியின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பொறியாளர் சிக்கந்தர், ஓட்டுநர் சுரேஷ், கண்காணிப்பாளர் பாலு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டன.  புது விளாங்குடி பகுதியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்றது. அப்போது, 5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ஈரோட்டைச் சேர்ந்த வீரணன் என்பவர் கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்தார். இதையடுத்து, அவரை மீட்பதற்காக ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

அப்போது மண்ணை வாரியபோது, அவரது தலைப்பகுதி மண் வாரும் இயந்திரத்துடன் சேர்ந்து வந்தது. இதைப் பார்த்து அதிர்ந்த சக ஊழியர்களும் அப்பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் வந்து அவரது உடலை மீட்டனர்.

உயிரிழந்தவர் ஈரோடு மாவட்டம் அமராவதி பகுதியை சேர்ந்த வீரணன் (எ) சுரேஷ் என்பவராவார். மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் ஆணையாளர் சிம்ரன் ஜித் சங் காலோன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தனது கணவரை பார்ப்பதற்காக மனைவி வந்து சந்தித்து சென்ற சிறிது நேரத்திலயே கணவர் மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த்தை கண்டு மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது.

உயிரிழந்த வீரணனுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.  ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் கழிவுநீர் தொட்டி தூய்மை பணியின்போது 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தொழிலாளி மண் சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிகளின்போது சில ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களுக்கான முறையான பாதுகாப்பை உறுதிபடுத்துவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் கூறுகையில், ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் போது உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.  மண் சரிவில் சிக்கியபோது உடனடியாக தொழிலாளியை மீட்க முயன்றபோது
எதிர்பாரதவிதமாக தலையோடு தோண்டப்பட்டுவிட்டது. மாநகராட்சி தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, தொழிலாளி உயிரிழப்பு விவகாரம் 4 பேர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஒப்பந்த நிறுவன உரிமையாளர் சுந்தரபாண்டியன், மேலாளர் பாலு,டிரைவர் சுரேஷ் குமார்,பாலு உள்ளிட்ட 4 பேர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.