மூதாட்டிக்கு தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனையை போலியாக வேறொரு நபருக்கு விற்பனை செய்தது தொடர்பாக சார்பதிவாளர் மற்றும் சாட்சி கையெழுத்திட்டவர்கள் உட்பட 7 பேர் மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பண்டாரம். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 75). இவருக்கு கடந்த 1989-ம் ஆண்டு தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 3 சென்ட் அளவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மனையில் தற்போது வெள்ளையம்மாள் சிறிய அறை கட்டி வசித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு
முன்பு கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சில நபர்கள் வந்து வெள்ளையம்மாளிடம் இது
எங்கள் இடம், இங்கிருந்து நீங்கள் வெளியேறுங்கள் என கூறி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.
உடனே இதுகுறித்து வெள்ளையம்மாள் அவரது வாரிசுகளிடம் தகவல் தெரிவிக்கவே, அவரது வாரிசுதாரர்கள் கடையநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று விசாரித்துள்ளனர். அப்போது தமிழக அரசு வெள்ளையம்மாளுக்கு கொடுத்த இலவச வீட்டுமனையானது போலியான
முறையில் வேறொருவருக்கு பத்திரப் பதிவு செய்தது தெரியவந்தது.
இதனால்்் அதிர்ச்சி அடைந்த வெள்ளையம்மாள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார்
அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அங்கு நீதிபதிகள் விசாரணை நடத்தியபோது போலியான முறையில் பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, போலியாக பத்திரப்பதிவு செய்துகொடுத்த அரசு
அதிகாரி உட்பட அவர்களுக்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்குப்பதிவு
செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தென்காசி மாவட்ட
காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில், வெள்ளையம்மாளின்
இடத்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்த மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த காரேஸ்வரி (வயது 51), பரமேஸ்வரி (35), சாந்தி (31) ஆகிய 3 பேர் மீதும், போலி
பத்திரப்பதிவு செய்ய சாட்சி கையெழுத்திட்ட மூக்கையா (50) மற்றும் முருகேஷ்
(45) ஆகியோர்் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் போலியான
ஆவணத்தை தயார் செய்து கொடுத்த வழக்கறிஞர் சுப்ரமணியன் மீதும், உரிய முறையில் விசாரணை நடத்தாமல் போலி பத்திரத்தை பதிவு செய்து கொடுத்த முன்னாள் கடையநல்லூர்
சார்பதிவாளர் சங்கர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் கடையநல்லூர் போலீசார்
வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனையேவே போலிப் பத்திரம் மூலம் பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தவறிய போதும், நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கைை எடுத்துள்ளது.
வயதான மூதாட்டியின் நிலம் மோசடி செய்யப்பட்ட செயல்
மிகவும் கண்டிக்கத்தக்கது என சாட்டையை சுழற்றியதுபோல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
– இரா. நம்பிராஜன்