மதுரை வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி பெண் பலியான சம்பவத்தின் அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், தனது மனைவி பழனியம்மாள் மற்றும் பேத்தி கல்பனாவுடன், உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.
மதுரை – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நகரி என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த ஆறுமுகம், கல்பனா ஆகிய இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சோழவந்தான் காவல் நிலைய போலீசார் தப்பியோடிய கார் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








