மதுரை: 5 கார்கள் முழுமையாக எரிந்து சேதம்

மதுரையில் வாகன பழுது பார்க்கும் கடையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 5 கார்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர்சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் வாகன பழுது நீக்கும் கடையில் மின்கசிவு…

மதுரையில் வாகன பழுது பார்க்கும் கடையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 5 கார்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.

அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர்சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் வாகன பழுது நீக்கும் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கார் பழுதுநீக்கும் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 கார்களும் தீயில் கருகி சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.