ஆவின் பொருட்களின் விலை உயர்வு

ஆவின் பொருட்கள் அனைத்தும் இன்று முதல் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை போன்றவற்றை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் செய்து வருகிறது. பால்வளத்…

ஆவின் பொருட்கள் அனைத்தும் இன்று முதல் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை போன்றவற்றை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் செய்து வருகிறது.

பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்நிறுவனம் செயல்பட்டு வரும், இந்த ஆவின் மையங்களில் பாலை தவிர மோர், தயிர், வெண்ணெய், நெய், பனீர், பாதாம் பவுடர், பால் பவுடர், ஐஸ் கிரீம்கள், சாக்லெட்கள் போன்ற பலவகையான பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அரை லிட்டர் தயிரின் விலை 27 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் ஆவின் நெய் 515 ரூபாயில் இருந்து 535 ரூபாயாகவும், குல்பி 25 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 200 கிராம் பாதாம் பால், 80 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.