சென்னையில் குதிரை பந்தையம்: நாளை துவங்குகிறது

6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னையில் குதிரை பந்தயம் நாளை தொடங்கவுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள மெட்றாஸ் ரேஸ் கிளப் மைதானத்தில் இந்தியாவின் தலை சிறந்த குதிரை பந்தயமாக கருதப்படும் Indian Turf Invitation…

6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னையில் குதிரை பந்தயம் நாளை தொடங்கவுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள மெட்றாஸ் ரேஸ் கிளப் மைதானத்தில் இந்தியாவின் தலை
சிறந்த குதிரை பந்தயமாக கருதப்படும் Indian Turf Invitation Cup என்னும் இந்தியாவின் தலை சிறந்த குதிரைகள் பங்கேற்கும் மாபெரும் குதிரை பந்தயம் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இப்போட்டியில் பங்கேற்று வெற்றிபெரும் குதிரைகளுக்கான பரிசு கோப்பைகள் அறிமுக விழா சென்னை தரமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த குதிரை பந்தயத்தில் பங்கேற்பதற்காக சென்னை, மும்பை, கொல்கத்தா, மைசூர், டெல்லி உள்ளிட்ட ஆறு நகரங்களில் உள்ள ரெஸ் கிளப்களில் வெற்றி பெற்று தலை சிறந்த 95 குதிரைகள் சென்னை வந்துள்ளன.

மொத்தமாக நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் பரிசாக வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த குதிரை பந்தயம் இந்தாண்டு சுழற்சி முறையில் சென்னையில் நடைபெறுகிறது.

இதன் பிறகு, ஆறு வருடங்கள் கழித்தே மீண்டும் சென்னையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெறும் இப்போட்டிகளை செட்டிநாடு குழுமம் நடத்துகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.