மதுரை : யுபிஎஸ்சி தேர்வில் 47 சதவீதம் தேர்வர்கள் ஆப்சென்ட்..!!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 47 சதவீதம் தேர்வர்கள் ஆப்சென்ட் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 17 மையங்கள் அமைக்கப்பட்டு காலை, மாலை என இரு வேளையில் யுபிஎஸ்சி முதல்நிலை…

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 47 சதவீதம் தேர்வர்கள் ஆப்சென்ட் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மட்டும் 17 மையங்கள் அமைக்கப்பட்டு காலை, மாலை என இரு வேளையில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் நடத்தப்பட்டன. காலை நடந்த மொழித்தாளில் 3,203 பேரும், மாலை நடந்த திறனறிவு தாளில் 3,230 பேர் தேர்வு எழுதாதது தெரியவந்துள்ளது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் பணியிடங்களுக்கு யூ.பி.எஸ்.சி தேர்வு 17 மையங்களில் நடைபெற்றது. மொத்தமாக 6,882 தேர்வர்கள் எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 3,679 தேர்வர்கள் மட்டுமே தேர்வை எழுதினார். 3,203 தேர்வர்கள் தேர்வை எழுதவில்லை.

அதேபோல பிற்பகல் தேர்வை 6,882 தேர்வர்கள் எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 3,652 தேர்வர்கள் மட்டுமே தேர்வை எழுதினர், 3,230 தேர்வர்கள் தேர்வை எழுதவில்லை, ஒட்டுமொத்தமாக 53 சதவீதம் தேர்வர்கள் மட்டுமே தேர்வை எழுதினார்கள், 47 சதவீதம் பேர் தேர்வை எழுதவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.