முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓய்வு பெற்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி

கடந்த 13ம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி பணி ஓய்வு பெற்றார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதி துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 13ம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர், இன்று பணி ஓய்வு பெற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் நடந்த பிரிவு உபச்சார பாராட்டு விழாவில், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இரு முறை பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், 13 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி, 46,313 வழக்குகளை முடித்து வைத்துள்ளார் என்று கூறினார்.

பிறகு, ஏற்புரையாற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதித்துறை பணிகளை சிறப்பாக கவனிக்க உதவியாக இருந்த சக நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். நாட்டிலேயே சிறந்த வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்றம் கொண்டிருப்பதாகவும், இளம் வழக்கறிஞர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 1960 ம் செப்டம்பர் 22ம் தேதி பிறந்த நீதிபதி துரைசாமி, சட்டப்படிப்பை முடித்து 1987ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். கடந்த 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2011 மார்ச் மாதம் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தது, அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

இவரது ஓய்வு காரணமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 54 ஆக குறைகிறது. காலியிடம் 21 ஆக அதிகரிக்கிறது. இதற்கிடையில் பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி ஓய்வுபெறுவதால், அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி டி.ராஜா நாளை முதல் பொறுப்புத் தலைமை நீதிபதியாக செயல்பட உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தீபாவளி கிஃப்ட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Halley Karthik

தெரு குரல் செய்தி எதிரொலி: உடனடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்

Web Editor

நேர்மையை நோக்கிய மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி வருகிறது; மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கருத்து!

Saravana