முக்கியச் செய்திகள் செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

எம்டெக் பயோ டெக்னாலஜி, எம்டெக் கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி உள்ளிட்ட இரண்டு பட்ட மேற்படிப்புகளுக்கான 2020-21ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனை எதிர்த்து மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்நிலையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாக பல்கலைக்கழகம் உறுதியளித்திருந்தது.

இந்நிலையில், இந்த சேர்க்கையில் 10 சதவிகித இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளதால், மாநில அரசு அமல்படுத்தாத நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது ஏன்? என்று உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும், ஏன் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், மத்திய அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை தவறாக பயன்படுத்துவதாக அதிருப்தியும் தெரிவித்துள்ளது.

இது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிபதி புகழேந்தி உத்தரவு அளித்துள்ளார்.

Advertisement:

Related posts

திமுக என்றாலே மன்னர் ஆட்சிதான்: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

Karthick

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – முதல்வர் பழனிசாமி

Gayathri Venkatesan

இறந்தவர் வீட்டில் கட்டுகட்டாக பணம்!